Puducherry weatherman

A channel which gives genuine updates about current weather condition of tamilnadu and puducherry

View in Telegram

Recent Posts

20.5.24 வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடலில் நிலவி வந்த சுழற்சி #கண்ணூர் அருகே சுழற்சி கடல் பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. அதேசமயம் கடலூர் மாவட்டம் அருகே கீழடுக்கில் சுழற்சி கிழக்கு நோக்கி நகர முற்பட்டு வருவதையும் உறுதி செய்ய இயல்கிறது. அந்த சுழற்சி மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களில் வங்க கடல் பகுதிகளில் தீவிரமடைய இருக்கிறது இது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே... இது தொடர்பாக நாம் முன்னதாகவே நிறைய முறை விவாதித்து விட்டோம்.

23.5.24 ஆகிய மே 23ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகள் உட்பட புதுச்சேரி சுற்றுவட்டார பகுதியில் உட்பட காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளை உட்பட வடகடலோர மாவட்ட பகுதிகள் டெல்டாவின் பகுதிகள் வட உள் மாவட்ட பகுதிகளில் பகல் நேர வெப்பநிலையானது மென்மேலும் உயர்வதற்கான சாத்திய கூறுகள் மிக மிக அதிகமாக இருக்கிறது. அதேசமயம் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இடங்களில் மழை தொடரும். தென்மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இடங்களில் கன மழை முதல் மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம். கேரளாவில் சொல்லவே தேவையில்லை அதிக கனமழைக்கும் வாய்ப்புகள் உண்டு.

இதைப் போன்ற காலங்களில் மாதிரிகளை பார்த்து அப்படியே கதை சொல்வது முட்டாள்தனமானது. அதை உணர்ந்து ஊடகங்களும் சமூக ஊடகங்களும் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கருதுகிறேன்.

விரிவான தகவல்களுக்கு - https://youtu.be/bn_1H7EQxjo
19.5.24 முன்னதாக 3.1 கிமீ உயரத்தில் தமிழகத்தின் மேல் நிலவி வந்த மத்திய அடுக்கு சுழற்சி தற்சமயம் டெல்டாவிற்கு மேலே நிலவிக் கொண்டிருக்கிறது அதேசமயம் நாம் முன்பு எதிர்பார்த்து இருந்ததைப் போலவே கீழ் அடுக்கில் அது டெல்டாவிற்கு கிழக்கே இருக்கக்கூடிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. - https://youtu.be/TQQWz5iGWWk
6.3.24 எல்நினோ தெற்கு அலைவு மாற்றம் தமிழகத்தை பாதிக்குமா? ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்குமா? நாளை எங்கெங்கு வெப்பநிலை உக்கிரம் அடையும்? தென்மேற்கு பருவமழை சிறப்பாக அமையுமா? - https://youtu.be/_1b9tmuCBLE
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்...
9.1.24 பிற்பகல் 2:15 மணி பருவமழை அதன் இறுதிக் கட்ட மழையை தற்பொழுது தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் வழங்கி வருகிறது.

நாம் எதிர்பார்த்திருந்ததை போலவே அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

விரிவான தகவல்களை அறிய - https://youtu.be/JfLKq0UmftE
இந்திய துணை கண்டத்தில் விலகுகிறது உயர் அழுத்தம்! கனமழை வாய்ப்புகள் அதிகரிக்கிறது! விரிவான விளக்கங்களுக்கு - https://youtu.be/Vl9P1K1cLkQ
12.12.23 தற்சமயம் தெற்கு இலங்கைக்கு தெற்கே இருக்கக்கூடிய கடல் பகுதிகளில் சுழற்சியானது நிலவி வருகிறது. அடுத்த சுற்று பருவ மழைக்கு தயாராகுங்கள். விரிவான வானிலை விளக்கங்களுக்கு - https://youtu.be/1ICZT73uUc0
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பூமத்திய ரேகையை ஒட்டிய இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் ஒரு புதிய சுழற்சியானது உருவாகி இருக்கிறது இது நாம் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான்.அது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்ற டிசம்பர் 13 அல்லது 14ஆம் தேதி வாக்கில் தெற்கு இலங்கைக்கு மிக நெருக்கத்தில் இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய கடல் பகுதிகளில் நிலைகொள்ள வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது.தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மீண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி வாக்கில் கனமழை பதிவாக தொடங்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு - https://youtu.be/1A8TJff0A0g
4.12.23 பிற்பகல் 3:45 மணி #சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகளில் மழை குறைவதற்கான சூழல்கள் உருவாக தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து நெல்லூர் வரை வடவட மேற்காக நகர்ந்து செல்ல இருக்கக்கூடிய மிகத் தீவிர புயலான #மிக்ஜாம் காரணமாக சென்னை மாநகரில் நள்ளிரவு அதிகாலை வரை மழை தொடரலாம்.

சென்னை மாநகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் இரவு/நள்ளிரவு நேரத்தில் மழை குறைந்து விடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

சென்னையில் எப்பொழுது மழை நிற்கும்? தற்போதைய புயல் மேலும் தீவிரமடைந்து எங்கு எப்போது கரையை கடக்கும்? இந்தப் புயல் கரையை கடப்பதன் ஊடாக சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் தவிர்த்து தமிழகத்தின் வேறு ஏதேனும் பகுதிகளில் பின்விளைவு மழைக்கான வாய்ப்புகள் உள்ளதா? இதைப் போன்ற உங்களுடைய கேள்விகளுக்கான பதில்களுக்கு - https://youtu.be/GvD34akzjCQ
30.11.22 வங்க கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ச்சியாக தீவிரம் அடைந்து வருகிறது அடுத்த 24 மணி நேரத்தில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற படி நிலையை எட்டிவிடும்.அது மட்டுமல்லாது அது மேற்கு -வடமேற்கு திசையில் பயணித்து தமிழக வடகடலோர மாவட்டங்களை ஒட்டி இருக்க கூடிய கடல் பகுதிகளை நெருங்க இருக்கிறது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கனமழை தமிழக கடலோரப் பகுதிகளில் உறுதி.

இன்றைய மழை வாய்ப்புகள் மற்றும் புயலின் நகர்வுகள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு - https://youtu.be/USbpKhk7M2o
See more posts

View in Telegram